பருப்பு பொடி சாதம் இப்புடி செஞ்சு கொடுங்க.. டிபன் பாக்ஸ் காலியா தான் வரும்…!

Dhal rice

காலை எழுந்ததும் ஒவ்வொரு இல்லத்தரசிகளுக்கும் வரும் குழப்பங்களில் ஒன்று லஞ்சுக்கு என்ன செய்வது என்றுதான், இனிமே அதைப் பற்றி யோசிக்க வேண்டாம், பருப்பை வைத்து நாம் காலம் காலமாக சாம்பார் மட்டுமே செய்து வருகிறோம் ஆனால் இன்று அந்த பருப்பை வைத்து பருப்பு பொடி  சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் 

  • கடலை பருப்பு =2 ஸ்பூன்
  • துவரம் பருப்பு= 2 ஸ்பூன்
  • உளுந்து =1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் =6
  • கருவேப்பிலை =சிறிதளவு
  • நெய் =2 ஸ்பூன்
  • எண்ணெய் =3 ஸ்பூன்
  • பூண்டு =ஐந்து பள்ளு
  • வெங்காயம் =இரண்டு
  • தக்காளி =இரண்டு
  • பெருங்காயம் =அரை ஸ்பூன்
  • மிளகு =1 ஸ்பூன்
  • சீரகம் =1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் =அரை ஸ்பூன்

 

செய்முறை
கடலைப்பருப்பு ,துவரம் பருப்பு, உளுந்து, மிளகு, சீரகம் வர மிளகாய் கருவேப்பிலை ஆகியவற்றை  சேர்த்து பொன்னிறமாக வறுத்து பவுடராக அரைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி கடுகு சேர்க்கவும், கடுகு பொரிந்ததும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கவும், வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து எண்ணெய்  பிரியும் வரை வதக்கி விடவும். பிறகு சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி அதிலே பருப்பு பொடியையும் சேர்த்து நன்கு கிளறி விடவும் .இப்போது கமகமவென பருப்பு பொடி சாதம் ரெடி. இந்த பருப்பு பொடியை இட்லி பொடிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நாம் இதில் பருப்பு சேர்த்து செய்துள்ளதால் இதில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது புரோட்டின் தசை வளர்ச்சிக்கும் நார்ச்சத்து நல்ல ஜீரண சக்தியையும் கொடுக்கும்.
ஆகவே இந்த பொடியை முன்பே நாம் தயார் செய்து வைத்து விட்டால் சமைக்க முடியாத நேரங்களில் சாதம் மட்டும் படித்து இந்த பொடியை தூவி சாதம் தயார் செய்யலாம் இது வேலையை சுலபமாக்குவதுடன் சுவையான லஞ்சாகவும் இருக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்