பெண்களே..! உங்கள் கருப்பையை பாதுகாக்க இதெல்லாம் பாலோ பண்ணுங்க..!

Published by
K Palaniammal

கருப்பை ஆரோக்கியம் -கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

கருப்பை ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் ;

கருப்பையின் ஆரோக்கியத்தை பொருத்தவரை ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜஸ்ட்ரான்  ஹார்மோன்களின் சீரான உற்பத்தி முக்கிய காரணமாக உள்ளது. இதன் மூலம் தான் பெண்களின் மாதவிடாய் சீராக இருக்கும் .இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் முறையற்ற மாதவிலக்கு ஏற்படும். இதனால் பிற்காலத்தில் குழந்தையின்மை நீர்கட்டிகள், மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

நாம் இதனை தடுக்க வேண்டும் என்றால் உணவு பழக்க வழக்கத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மேலும் பூப்படைந்த நாள் முதலே கருப்பை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தவறான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் அதிக இனிப்பு பதார்த்தங்களை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இனிப்பு பதார்த்தங்கள் அதிகம் எடுத்துக்கொள்ளும் போது ரத்தம் கெட்டி தன்மை அடைகிறது .

பிறகு கருப்பை அதை வெளியேற்ற சிரமப்படுகிறது .கருப்பைக்கு சீரான ரத்த ஓட்டம் இருக்க வேண்டும். ஒரு பெண் பூப்படைந்த முதல் நாள் இருந்து இனிப்பு பதார்த்தங்களை குறைத்துக் கொள்வது நல்லது .அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் இன்சுலின் அதிகமாக சுரக்கும்.

இந்த அதிகப்படியான இன்சுலின் ஈஸ்ட்ரோஜனை உற்பத்தியை  தடுக்கிறது. ஈஸ்ட்ரோஜன் ப்ரோஜெஸ்ட்ரான்  ஹார்மோன் உற்பத்தியில் தடை ஏற்படுத்துகிறது. இந்தப் ப்ரோஜெஸ்ட்ரான் தான் மாதவிடாய் சரியாக வெளியேற உதவி செய்கிறது. அதனால் இன்சுலினை அதிகப்படுத்தக்கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.

கருப்பை ஆரோக்கியதிற்கு உதவும்  உணவுகள்;

வாரம் இரண்டு முறை மோரில் முருங்கை கீரை பொடியை சேர்த்து குடித்து வர வேண்டும் .இந்த முறை மதிய வேலைகளுக்கு முன்பே எப்போது வேண்டுமானாலும் குடித்துக் கொள்ளலாம்.

பூசணி விதை ,ஆளி விதை இவற்றை பொடி ஆக்கி ஒரு ஸ்பூன் வீதம் தினமும் காலையில் சாதத்துடன் பிசைந்து எடுத்துக் கொள்ளவும். இந்த முறையை மாதத்தில் முதல் 15 நாள் செய்து வரலாம் .அடுத்த 15 நாள் எள்  மற்றும் சூரியகாந்தி விதைகளை வறுத்து பொடி செய்து சாதத்தில் பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு எடுக்க முடியவில்லை எனில்  வாரத்திற்கு இரண்டு நாள் வீதம் எடுத்துக் கொள்ளலாம் .முதல் பதினைந்து நாள் இரண்டு விதைகளையும் அடுத்த 15 நாள் இரண்டு விதைகளையும் கணக்கிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும் .இதன் மூலம் கருப்பை பாதுகாக்கபடும், ரத்த ஓட்டம் சீராக்கப்படுகிறது.

பட்டை தூள் ஒரு ஸ்பின்ஸ் அளவு வாரம் ஒருமுறை ஏதேனும் உணவு அல்லது தண்ணீரிலோ டீயாகவோ  கலந்து  எடுத்துக் கொள்ளலாம், இதன் மூலம் இன்சுலின் அளவு கட்டுக்குள் வைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஹார்மோனல் இன் பேலன்ஸ் சீராக்கப்படுகிறது.

இந்த ஹார்மோனல் இம்பேலன்ஸினால் முகத்தில் முகப்பரு ,நிற மாற்றம் போன்றவை ஏற்படுகிறது. இதனால் பல பெண்களுக்கும் மன உளைச்சல் ஏற்படுகிறது.

மேலும் உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து வாரத்தில் இரண்டு நாட்களுக்கு அந்த தண்ணீரை கொடுத்து வரலாம் .இதன் மூலம் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதோடு மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது. ரத்தம் கெட்டியாவதையும் தடுக்கிறது.

உடற்பயிற்சி;

குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் கருப்பைக்கு என்று உள்ளது அவற்றுள் தோப்புக்கரணம் மற்றும் பட்டர்பிளை உடற்பயிற்சிகள் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. இந்த பயிற்சிகளை தினமும் செய்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதோடு கருப்பை வலுவாக்கப்படுகிறது.

இந்த உடற்பயிற்சிகளை குழந்தையிலிருந்து கடைப்பிடித்து வந்தால் பிற்காலத்தில் கருப்பை பிரச்சினைகள் ஏற்படுவது தடுக்கப்படும். எனவே ஒவ்வொரு பெண்ணும் கருப்பை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

Recent Posts

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

6 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

7 hours ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

8 hours ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

9 hours ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

10 hours ago

“எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

11 hours ago