உங்க தொண்டையில கீச் கீச் சா? இதோ அதற்கான தீர்வு..

throat pain

நம் உடலின் நிலைவாசல் தொண்டை என சொல்லலாம். நாம் வாழும் சுற்றுச்சூழலுக்கு தகுந்தவாறு தொண்டையில் மாற்றங்கள் நிகழும். குறிப்பாக குளிர்காலத்தில் அதன் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். எனவே நாம் இந்த பதிவில் எவ்வாறு நம் தொண்டையை பாதுகாத்துக் கொள்வது ஒருவேளை தொந்தரவு ஏற்பட்டால் அவற்றை எளிதாக எப்படி சரி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம்.

தொண்டையில் தொந்தரவு ஏற்பட முக்கிய காரணம் குளிர்ந்த மற்றும் அதிக இனிப்பு சுவைகளை எடுத்துக் கொள்வது முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால் தொண்டையில் தொற்று ஏற்பட்டு தொண்டை வலி, கரகரப்பு போன்ற தொந்தரவை உருவாக்குகிறது. மேலும் தொண்டையில் சளி தேங்கி இருப்பது அதுவும் தொண்டையில் வலியை ஏற்படுத்தும் இது இடைவிடாத தொடர் இருமலாக கூட இருக்கும் இந்தத் தொடர் இருமலால் இரவு நேரங்களில் நமது தூக்கமும் பாதிப்படையும்.

நம் தொண்டையை பாதுகாக்கும் முறைகள்:

இனிப்பு மற்றும் குளிர்ந்த குளிர்ந்த பொருட்களை நாம் எடுத்துக்கொண்ட பிறகு சுடு தண்ணீரால் வாயை நன்கு கொப்பளித்து வரவேண்டும்.

தொண்டையில் வலி மற்றும் தொற்று ஏற்பட்டால் சுடு தண்ணீரில் உப்பு கல்லை போட்டு வாய் கொப்பளித்து வரவேண்டும். ஒரு நாளைக்கு ஆறிலிருந்து ஏழு முறை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தால் தொண்டை வலி வரட்டு இருமல் போன்றவை குணமாகும்.

மிளகு  கடித்து அதன் சாரை விழுங்க வேண்டும். மிளகுத்தூள் கால் ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வரவும் , சுடு தண்ணீர் நல்ல செரிமானத்தை கொடுப்பதோடு தொண்டைப் பகுதியில் கிருமி மற்றும் வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்கவும் தொண்டையை பாதுகாப்பாகவும்  வைத்துக்கொள்ளும்.

பொட்டுக்கடலையை நன்கு பொடித்து சிறிதளவு மிளகையும் பொடித்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்து சாப்பிட்டு வரவும். வரட்டு இருமலை குணப்படுத்தும்.

வெள்ளைப் பூண்டை இடித்து ஒரு துணியில் வைத்து நெருப்பில் வாட்டி அதை சாறு எடுத்து அந்த சாறுடன் சம அளவு தேன் கலந்து தொண்டைக்குள் தடவி தடவி விடவும். வெள்ளைப் பூண்டுக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது.

பாலில் மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து உறங்கும் முன் குடித்து வரலாம்.

அதிக பேச்சாளர்கள் மற்றும் பாடல் பாடுபவர்கள் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் ஆவது மௌனமாக இருப்பது தொண்டைக்கு இதமாக இருக்கும். எனவே இந்த முறைகளை பயன்படுத்தி பயனடைவீர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்