உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏனைய தினங்களுடன் ஒப்புநோக்கும்போது மனிதவிழுமியங்களில் உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தினமாகவே இது காணப்படுகின்றது. இங்கு நட்பு எனும்போது பல பரிமாணங்களை எடுத்துக் கூறலாம்.
நண்பர்கள் தினத்தில், நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் நண்பர்கள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது அன்பை பரிமாறிக்கொள்கின்றனர். அனால் தொலைதூரத்தில இருப்பவர்களுக்கு வாட்ஸ் ஆப், போன்ற சமூக வலைத்தளங்களில் அனுப்பியும் தங்கள் நட்பை பலப்படுத்திக் கொள்கின்றனர்.
சாதி, இனம், மொழி, பால் பாகுபாடு இன்றி அன்பின் அடையாளமாக கொண்டாடப்பட்டுவரும் இந்த நண்பர்கள் தினத்தில், தலைமுடி நரைத்தாலும் நண்பா உன்னிடம் நான் கொண்ட நட்பு இன்னும் மாறவில்லை என்று உலகெங்கும் உள்ள வயதானவர்கள்கூட இன்றைய தினத்தில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.
நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நடந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…