இந்த பொடியை தினமும் பயன்படுத்தி வந்தால் முகம் மட்டுமில்ல உடல் முழுவதும் வெள்ளையாக பளபள என மின்னும்.
எல்லாருக்குமே பார்ப்பதற்கு அழகாக வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், ஒருசிலருக்கு முகம் பார்ப்பதற்கு கலராக இருக்கும். ஆனால், கை, கழுத்து, கால் என அனைத்தும் கறுத்து போய் இருக்கும். அது பார்ப்பதற்கே நன்றாக இருக்காது. உடல் முழுவதும் ஒரே கலராக இருந்தால் தான் அழகாகவும் இருக்கும். அதனால் உடல் முழுவதும் வெள்ளையாக இருக்க இந்த பொடியை பயன்படுத்தி வாருங்கள். இதற்கு தேவையான பொருட்கள் கடலை மாவு 1 கப், முல்தானி மெட்டி 1/2 கப், சிவப்பு சந்தன பொடி 1/2 கப், ரோஜா இதழ்கள் 1 கப், கருஞ்சீரகம் 2 ஸ்பூன்.
இவற்றை நன்றாக நைசாக அரைத்து வைத்து கொள்ளுங்கள். இது தான் நமக்கு தேவையான பொடி. இதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அளவு ஒரு கிண்ணத்தில் இந்த பொடியை எடுத்து கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் தயிர் மற்றும் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து கை, கழுத்து, முதுகு, கால் என எங்கெல்லாம் நிறம் கறுத்து போய் இருக்கோ அங்கே தடவி கொள்ளுங்கள். 20 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் இதனை கழுவி கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் உங்கள் உடல் பார்ப்பதற்கே பொலிவாக இருக்கும். இதனை முகத்திற்கும் பயன்படுத்தலாம். ஆனால், முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது இது ஒத்துக்கொள்கிறதா என்று பரிசோதித்து பின்னர் பயன்படுத்துங்கள். சிலருக்கு அரிப்பு ஏற்படலாம். அதனால் பேச் டெஸ்ட் செய்து விட்டு பயன்படுத்தி வாருங்கள். உங்கள் தேகம் ஒரே நிறத்தில் நல்ல பொலிவாக பளபள என்று மின்ன தொடங்கும். இதனை வாரத்திற்கு 3 நாட்கள் பயன்படுத்தலாம்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…