தித்திக்கும் பொங்கல்..!! புது ரெசிபி புட்டரிசி பொங்கல்..!செய்து அசத்துங்கள்..!!
சர்க்கரை பொங்கலை போலவே இயற்கையான புட்டரிசியிலும் சர்க்கரைப் பொங்கல் செய்யலாம்.எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நெய் : அரை கப்
புட்டரிசி : ஒரு கப் (சிவப்புக் கைக்குத்தல் அரிசிதான் புட்டரிசி)
பாசிப் பருப்பு : அரை கப்
வெல்லம் : 2 கப்
பச்சைக்கற்பூரம் : ஒரு சிட்டிகை
ஏலக்காய்ப் பொடி : அரை டீஸ்பூன்
ஜாதிக்காய்ப் பொடி: ஒரு சிட்டிகை
சிறிதளவு முந்திரி, பாதாம், உலர் திராட்சை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
செய்முறை:
எடுத்து வைத்துள்ள பாசிப் பருப்பை ஒரு வாணலியில் இட்டு அது நன்றாக சிவக்க வறுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் புட்டரிசியானது போதுவாக வேகுவதற்கு நேரம் எடுக்கும் என்பதால் அதனை முன்னே வெந்நீரில் சுமார் அரைமணி நேரம் ஊற வைத்த பிறகு ஒரு மிக்ஸியில் தண்ணீர் துளி இல்லாமல் நல்ல ரவை போல நன்றாக உடைத்துக் கொள்ளவும்.
பின் உடைத்த புட்டரிசியை நாம் வறுத்து வைத்துள்ள பாசிப் பருப்பை குக்கரில் சேர்த்து போட்டு அதில் நான்கு கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் சரியாக நான்கு விசில் வரும் வரை அடுப்பை குறைத்து வைத்து வேக வைக்க வேண்டும்.இதனிடையே எடுத்து வைத்துள்ள வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் அது இட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து வடிகட்டிய பின்னர் அதனை அடுப்பில் வைத்து காய்ச்சவும். இப்பொழுது வெல்லக்கரைசலின் பச்சை வாசனை போன பின் அதில் வெந்த அரிசி மற்றும் பருப்புக் கலவையைச் சேர்த்துக் அடுப்பை குறைய வைத்துக் கிளறவும். அதன் பிறகு ஏலக்காய், ஜாதிக்காய் பொடி மற்றும் பச்சைக் கற்பூரம் இதனோடு முந்திரி, பாதாம் மற்றும் திராட்சை ஆகியவற்றைச் சேர்த்து நெய் அதில் விட்டுக் கிளறி இறக்க எடுத்தால்.சுவையான புட்டரிசி பொங்கல் ரெடி.