இந்தாண்டு பொங்கலுக்கு சர்க்கரை பொங்கலுடன் சம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கலையும் வைத்து கொண்டாடுவோம்.செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
சம்பா கோதுமை ரவை : ஒரு கப்
பாசிப் பருப்பு : அரை கப்
வெல்லம் : 2 கப்
நெய் : அரை கப்
ஏலக்காய்ப் பொடி : அரை டீஸ்பூன்
ஜாதிக்காய்ப் பொடி : ஒரு சிட்டிகை
பச்சைக்கற்பூரம் : ஒரு சிட்டிகை
இவற்றுடன் முந்திரி, பாதாம், உலர் திராட்சை சிறிதளவு எடுத்து கொள்ளவும்
அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதும் எண்ணெய் விடாமல் எடுத்து வைத்துள்ள சம்பா கோதுமை ரவையையும் மற்றும் பாசிப் பருப்பையும் தனித்தனியாகப் பொன்னிறமாக வறுத்து வைத்து கொள்ள வேண்டும்.இதன் பின் எடுத்து வைத்துள்ள ஒரு குக்கரில்இரண்டையும் சேர்த்து நான்கு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை குறைவான நிலையில் வைத்து கொள்ளவேண்டும்.குக்கரில் நான்கு விசில் வரும் வரை அதனை நன்றாக வேக விட வேண்டும்.
இதன் பின் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி நன்கு கரைத்து அதனை வடிகட்டி பின்னர் ஒரு கடாயில் ஊற்றி அதனை அடுப்பில் வைத்து இப்பொழுது வெல்லக்கரைசலின் பச்சை வாசனை போனதுமே முன்பு குக்கரில் வைத்து உள்ள கோதுமை ரவை கலவையில் இந்த சர்க்கரை கரைசலை ஊற்றி இலேசான தீயில் கிளற வேண்டும் அதனுடன் ஏலக்காய்ப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி மற்றும் முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து கொண்ட பிறகு நெய் விட்டுக் கிளறி எடுத்தால் சுவையான சம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல் ரெடி..
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…