தித்திக்க வரும் பொங்கலுக்கு..! சம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல்..!செய்வது எப்படி..!

Samba Wheat Semolina Sugar Pongal

இந்தாண்டு பொங்கலுக்கு சர்க்கரை பொங்கலுடன் சம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கலையும் வைத்து கொண்டாடுவோம்.செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

சம்பா கோதுமை ரவை  : ஒரு கப்
பாசிப் பருப்பு  : அரை கப்
வெல்லம்  : 2 கப்
நெய்   : அரை கப்
ஏலக்காய்ப் பொடி   : அரை டீஸ்பூன்
ஜாதிக்காய்ப் பொடி : ஒரு சிட்டிகை
பச்சைக்கற்பூரம் : ஒரு சிட்டிகை

இவற்றுடன் முந்திரி, பாதாம், உலர் திராட்சை  சிறிதளவு எடுத்து கொள்ளவும்

செய்வது எப்படி..?

அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதும் எண்ணெய் விடாமல் எடுத்து வைத்துள்ள சம்பா கோதுமை ரவையையும் மற்றும் பாசிப் பருப்பையும் தனித்தனியாகப் பொன்னிறமாக வறுத்து வைத்து கொள்ள வேண்டும்.இதன் பின்  எடுத்து வைத்துள்ள ஒரு குக்கரில்இரண்டையும் சேர்த்து நான்கு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை குறைவான நிலையில் வைத்து கொள்ளவேண்டும்.குக்கரில் நான்கு விசில் வரும் வரை அதனை நன்றாக வேக விட வேண்டும்.

இதன் பின் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி நன்கு கரைத்து அதனை வடிகட்டி பின்னர் ஒரு கடாயில் ஊற்றி அதனை அடுப்பில் வைத்து இப்பொழுது வெல்லக்கரைசலின் பச்சை வாசனை போனதுமே முன்பு குக்கரில் வைத்து உள்ள கோதுமை ரவை கலவையில் இந்த சர்க்கரை கரைசலை ஊற்றி இலேசான தீயில் கிளற வேண்டும் அதனுடன் ஏலக்காய்ப் பொடி, ஜாதிக்காய்ப் பொடி மற்றும் முந்திரி, பாதாம், திராட்சை சேர்த்து கொண்ட பிறகு நெய் விட்டுக் கிளறி எடுத்தால் சுவையான சம்பா கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல் ரெடி..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்