சர்க்கரை பொங்கல் , கற்கண்டு பொங்கல், எல்லாம் தெரியும் ஆனால் இது என்ன கரும்புச்சாறு பொங்கல் என்று தானே நினைக்கிறீர்கள் சுவையான கரும்புச்சாறு பொங்கல் செய்யலாம்
பச்சரிசி – ஒரு கப்
நறுக்கிய பேரீச்சை – கால் கப்
முந்திரி – 25 கிராம்
பாசிப் பருப்பு – அரை கப்
கரும்புச் சாறு – 2 கப்
நெய் – சிறிதளவு
ஏலக்காய்த்தூள் -சிறிது
வெறும் ஒரு வாணலியில் பாசிப்பருப்பை நன்றாக வாசனை வரும் வரை வறுத்து அதன் பின்னர் எடுத்து வைத்துள்ள பச்சரிசியோடு சேர்த்து கழுவ வேண்டும்.பிறகு குக்கரில் இதனை இட்டு இரண்டு கப் கரும்புச்சாறு மற்றும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்து கொள்ள வேண்டும்.கவனமாக மூன்று விசில்கள் வரும் வரை நன்றாக வேக வைத்து இறக்கவும்.
குக்கரில் பிரஷரானது போனதும் ஒரு வாணலியை எடுத்து அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடாக்கி நறுக்கி வைத்துள்ள பேரீச்சை, முந்திரி மற்றும் ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து அதை பொங்கலில் இட்டுக் கிளறியப் பின்னர் அனைவருக்கும் பரிமாறுங்கள். மேலும் கரும்புச்சாறே பொங்கலுக்கு தேவையான இனிப்பைத் தருவதால் இதற்கு சர்க்கரை தேவையில்லை.மேலும் தங்களுக்கு தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.இப்பொழுது சுவையான கரும்புச்சாறு பொங்கல் ரெடி.
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…