மனிதர்களின் தாகத்தை தீர்க்கும் இயற்கை கொடையளித்த ஒன்று தான் இளநீர்.இதுவரை தாகத்தை தீர்த்த இளநீர் இப்பொழுது சுவையான பொங்கலாகும் பசி போக்கும் விதமாக வரமளிக்கிறது.
பச்சரிசி – 2 கப்
இளநீர் – 2 கப்
சர்க்கரை – ஒன்றரை கப்
நெய் – கால் கப்
முந்திரி -2 டேபிள்ஸ்பூன்
பச்சைக்கற்பூரம் – ஒரு சிட்டிகை
பாசிப் பருப்பு – கால் கப்
தேங்காய்ப்பால் – ஒரு கப்
தேங்காய்பல் – 2 டேபிள்ஸ்பூன்
ஒரு வாணலியில் பாசிப் பருப்பை வறுத்து வைத்து கொண்டு அதனோடு பச்சரியை சேர்த்து கழுவ வேண்டும். இந்த இரண்டையும் குக்கரில் வைத்து அதற்கு இரு மடங்கு தண்ணீர் மற்றும் இளநீரை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து விட்டு குக்கர் மூன்று விசில்கள் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
குக்கரில் பிரஷர் போனதுமே குக்கரைத் திறந்து அதனோடு சர்க்கரை தேங்காய்ப்பாலை சேர்த்து நன்றாக கிளறவும். பின் தேங்காயை நன்றாக பல்லு பல்லாகக் கீறி அதனை நெய்யில் வறுத்து முந்திரியை அதனோடு சேர்த்து வறுத்து இறக்கி வைத்துள்ள பொங்கலில் சேர்க்க வேண்டும்.
அதனுடன் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்தால் இளநீரின் இயற்கை வாசனையைக் கெடுத்து விடும் என்பதால் அவை இங்கு தேவையில்லை. இப்பொழுது இளநீர் பொங்கல் ரெடி..ஆனால் பரிமாறும் முன்பு பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கலந்துப் பரிமாறவும்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…