தாகத்தை தணிக்கும் இளநீர்…!!இப்பொழுது பொங்கல் வடிவில் சுவையான இளநீர் பொங்கல்..!செய்வது எப்படி..!!

Coconut water pongal

மனிதர்களின் தாகத்தை தீர்க்கும் இயற்கை கொடையளித்த ஒன்று தான் இளநீர்.இதுவரை தாகத்தை தீர்த்த இளநீர் இப்பொழுது சுவையான பொங்கலாகும் பசி போக்கும் விதமாக வரமளிக்கிறது.

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 2 கப்
இளநீர் – 2 கப்
சர்க்கரை – ஒன்றரை கப்
நெய் – கால் கப்
முந்திரி  -2 டேபிள்ஸ்பூன்
பச்சைக்கற்பூரம் – ஒரு சிட்டிகை
பாசிப் பருப்பு – கால் கப்
தேங்காய்ப்பால் – ஒரு கப்
தேங்காய்பல் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

ஒரு வாணலியில் பாசிப் பருப்பை வறுத்து வைத்து கொண்டு அதனோடு பச்சரியை சேர்த்து கழுவ வேண்டும். இந்த இரண்டையும் குக்கரில் வைத்து அதற்கு இரு மடங்கு தண்ணீர் மற்றும் இளநீரை ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து விட்டு குக்கர் மூன்று விசில்கள் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

குக்கரில் பிரஷர் போனதுமே குக்கரைத் திறந்து  அதனோடு சர்க்கரை தேங்காய்ப்பாலை சேர்த்து நன்றாக கிளறவும். பின் தேங்காயை நன்றாக பல்லு பல்லாகக் கீறி அதனை நெய்யில் வறுத்து முந்திரியை அதனோடு சேர்த்து வறுத்து இறக்கி வைத்துள்ள பொங்கலில் சேர்க்க வேண்டும்.

அதனுடன் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்தால் இளநீரின் இயற்கை வாசனையைக் கெடுத்து விடும் என்பதால் அவை இங்கு தேவையில்லை. இப்பொழுது இளநீர் பொங்கல் ரெடி..ஆனால் பரிமாறும் முன்பு பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கலந்துப் பரிமாறவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்