தித்திக்க வரும் பொங்கல்..!! இன்னும் தித்திக்க இதோ கல்கண்டு பொங்கல்..!செய்வது எப்படி..!!

Kalkandu Pongal

கல்கண்டு :400 கிராம்

பால்         :   1 லிட்டர்

திராட்சை  : 10௦

நெய்          : 200 கிராம்

முந்திரி     :  10௦

பச்சரிசி     : 500 கிராம்

ஏலக்காய்   : சிறிதளவு தூள்

செய்வது எப்படி :

எடுத்து வைத்த கல்கண்டை நன்றாக பொடித்து கொள்ளவும்.

பின்னர் பச்சரிசியை நன்றாக கழுவி அதை அரை மணி நேரம் ஊற வைத்து  ரவையை போல உடைத்து கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

காய்ச்சிய பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன்  நாம் ஏற்கனவே உடைத்து வைத்திருந்த பச்சரிசியை சேர்த்து நன்றாக குழைய வேக வைக்க வேண்டும்.

இதன் பின் இடையிடையே தேவையான நெய்யை சேர்க்கவும்.

இதற்கு பிறகு பொடித்த கல்கண்டை சேர்த்தவுடன் கல்கண்டு கரைந்ததும் நெய்யால் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நெய்யை ஊற்றி நன்கு கலந்து விட்ட பிறகு இறக்கி எடுத்த 10 நிமிடம் கழித்து பரிமாறினால்  சூப்பரான  தித்திக்கும் சுவையான கல்கண்டு பொங்கல் ரெடி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்