உணவு

Kolukattai : பால்கோவாவில் கொழுக்கட்டை செய்யலாமா..? வாங்க எப்படினு பார்க்கலாம்..!

Published by
லீனா

பொதுவாக நாம் நமது வீடுகளில் குழந்தைகளுக்கு உணவு செய்து கொடுப்பது என்றாலே என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிப்பதுண்டு. ஆனால், நாம் குழந்தைகளுக்கு கடைகளில் மிகவும் எளிதாக உணவை வாங்கி கொடுத்து விடுகிறோம். நாம் குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய உணவை வீட்டில் செய்து கொடுப்பது தான் ஆரோக்கியமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும்.

தற்போது இந்த பதிவில் குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய அசத்தலான பால்கோவா கொழுக்கட்டை ரெசிபி பற்றி பார்ப்போம்.

தேவையானவை 

  • வெல்லம் – அரைக்கப்
  • தேங்காய் துருவல் – 1 கப்
  • பால் – 1 கப்
  • பால் பவுடர் – முக்கால் கப்
  • சர்க்கரை – 2 ஸ்பூன்
  • நெய் – 1 ஸ்பூன்

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு கடாயில் அரை கப் வெல்லம் போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி,  பாகு போன்று செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனுள் துருவிய தேங்காய் போட்டு நன்கு கிளறி தண்ணீர் பதம் வற்றி வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

நீங்கள் வேக வைக்காத அரிசியை சாப்பிடும் பழக்கம் உள்ளவரா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..

பின் மேலும் ஒரு கடாயில் பால் ஊற்றி, பால்பவுடர் போட்டு, சர்க்கரை, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறி பால்கோவா பாதத்தை விட சற்று கெட்டியாக  வரும் வரை நன்கு கிளறிவிட்டு பின்பு அடுப்பிலிருந்து இறக்கி அதுஆறிய பின்பு உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் உருண்டையாக பிடித்து வைத்துள்ள பால்கோவாவின் நடுவில் பள்ளம் போட்டு அதனுள் செய்து வைத்துள்ள தேங்காய் கலவையை ஒரு ஸ்பூன் வைத்து,  மீண்டும் உருண்டையாக உருட்டி கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்.

குழந்தைகளுக்கு பால்கோவா என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. எனவே நாம் கொழுக்கட்டைக்கு பதிலாக பால்கோவா செய்வது போன்று செய்து இவ்வாறு கொழுக்கட்டை  செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது அவர்கள் உடலுக்கு ஆரோக்கியமானது. இவ்வாறு கொடுக்கும் போது, கொழுக்கட்டை வேண்டாம் என்று சொல்லும் குழந்தைகள் கூட விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள்.

Published by
லீனா

Recent Posts

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

7 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

8 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

9 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

10 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

10 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

11 hours ago