சுவையான நூடுல்ஸ் அடை செய்வது எப்படி?
நாம் நமது அன்றாட வாழ்வில் தினமும் காலையில் டிபன் செய்து சாப்பிடுவதுண்டு. அதில் நாம் அதிகமாக செய்து சாப்பிடுவது இட்லி மற்றும் தோசை தான். இந்த உணவுகளையே நாம் கொடுப்பதால் நமது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்கள் இந்த உணவுகள் வெறுத்து விடுகிறது.
தற்போது நாம் இந்த பாதியில் சுவையான நூடுல்ஸ் ஆடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- சில்லி சாஸ் – 2 தேக்கரண்டி
- மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி
- சிக்கன் – ஒரு பீஸ்
- எலுமிச்சை பழம் – 1
- உப்பு – தேவியான அளவு
- முட்டை கோஸ் – 100 கிராம்
- காரட் – 100 கிராம்
- தக்காளி – 100 கிராம்
செய்முறை
முதலில் கேரட், தக்காளி, முட்டைகோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் தண்ணீரை கொதிக்க வைத்து நூடுல்ஸை ஒரு நிமிடம் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் வேக வைத்த நூடுல்சுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் முட்டை, சில்லி சாஸ், மிளகுத்தூள், சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய சிக்கன் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.
பின் அதில் தேவையான உப்பு மற்றும் எலுமிச்சை பழம் சாற்றையும் பிழிந்து கலந்து கொள்ள வேண்டும். பின் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அடை கல்லில் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்க வேண்டும். இப்பொது சுவையான நூடில்ஸ் அடை தயார்.