சுவையான ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி?

தினமும் நாம் காலையிலும், மாலையிலும், தேநீருடன் நமக்கு பிடித்தமான உணவுகளை சாப்பிடுவதுண்டு. இந்த உணவுகளை நாம் கடையில் வாங்கி சாப்பிடுவதை விட, வீட்டிலேயே செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
தற்போது இந்த பதிவில் சுவையான ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- கடலை மாவு – 3 கப்
- அரிசி மாவு – 1 கப்
- மிளகாய் தூள் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- சோடா மாவு – சிட்டிகை அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- முறுக்கு குழாய், ரிப்பன் அச்சு
செய்முறை
முதலில் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, மிளகாய்தூள், சோடாமாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசைய வேண்டும்.
அதன்பின் காய்ந்த எண்ணெய் ஊற்றி மேலும் இலகுவாக பிசைய வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததாகும் ரிப்பன் அச்சு கொண்டு எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான ரிப்பன் பக்கோடா தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!
April 11, 2025
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025