சுவையான சிக்கன் கடாய் செய்வது எப்படி தெரியுமா?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிக்கன் சம்பந்தமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. சிக்கனை கொண்டு விதவிதமாக செய்கின்ற அணைத்து உணவுகளையும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதுண்டு.
தற்போது இந்த பதிவில் சுவையான சிக்கன் கடாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- சிக்கன் – கால் கிலோ
- பச்சை மிளகாய் – 7
- தக்காளி – 2
- இஞ்சி – 2 திண்டு
- பூண்டு – 10 பல்
- எண்ணெய் – தேவையான அளவு
- வெங்காயம் – 2
- சாம்பார் மிளகாய்தூள் – 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய் போன்றவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் பச்சை மிளகாய் கொத்தமல்லித்தழை இரண்டையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டை அதில் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் தக்காளியை போட்டு வதக்க வேண்டும்.
பின் சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, இஞ்சி போட்டு கிளற வேண்டும். அதன் பிறகு சிக்கனை சேர்த்து சுருள வேகா விட வேண்டும். சிக்கன் வெந்ததும், சாம்பார் மிளகாய்தூள், வெங்காயம் போட்டு கிளறி இறக்க வேண்டும்.