அசத்தலான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?
- தை பொங்கல் என்றாலே நமது வீடுகளில் பொங்கல் தான் ஸ்பெஷல்.
- சுவையான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?
தை பொங்கல் என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது பொங்கல் தான். நமது வீடுகளில் பொங்கல் செய்தால் அன்றைய தினம் பொங்கல் கொண்டாடிய ஒரு நிறைவு இருக்கும். அந்த வகையில், நமது இல்லங்களில் பல வகையான பொங்கல்களை செய்வது உண்டு. தற்போது இந்த பதிவில், அசத்தலான சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- அரிசி – 1 கப்
- பாசிப்பயறு – 1/4 கப்
- பால் – 4 கப்
- வெல்லம் – 1 கப்
- முந்திரி – 3 தேக்கரண்டி
- உலர்திராட்சை – 3 தேக்கரண்டி
- ஏலக்காய் – 5
- நெய் – 1/4 கப்
- தேங்காய் – 1/2 கப்
செய்முறை
முதலில் ஊறவைத்த அரிசியுடன், பாசிப் பயறு சேர்த்து பாலில் வேகவைக்க வேண்டும். நெய், வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து குறைந்த தீயில் நன்றாக கிளற வேண்டும். பின் மற்றொரு கடாயில் நெய்விட்டு முந்திரி, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து வேகவைத்த அரிசிக் கலவையுடன் சேர்க்க வேண்டும்.
பின் அடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாற வேண்டும். இப்பொது சுவையான சர்க்கரை பொங்கல் தயார்.