சுவையான ஆனியன் சிக்கன் வறுவல் செய்வது எப்படி?
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை சாப்பிடுகிறோம். அதிலும், மீன், இறைச்சி போன்ற அசைவ உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு.
தற்போது இந்த பதிவில் சுவையான ஆனியன் சிக்கன் வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- சிக்கன் – அரைகிலோ
- பெரிய வெங்காயம் – 2
- இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் – 2 டீஸ்பூன்
- மிளகுத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
- எண்ணெய் – தேவைக்கேற்ப
- கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி
செய்முறை
சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பெரிய வெங்காயத்தை மேல் தோல் உரித்து வட்டமாக நறுக்கி அதை தனித்தனியாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.
அதன்பின், கரம் மசலாத் தூளை சேர்த்து சிறிது நேரம் வதக்கி உடனே சிக்கன் துண்டுகளையும் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். சிக்கன் வெந்ததும், நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து பிரட்டி இரண்டு நிமிடத்தில், கொத்தமல்லி தலையை தூவி இறக்கி விட வேண்டும்.