சுவையான பாசிப்பருப்பு இட்லி செய்வது எப்படி?
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை விரும்பி உண்பது. அதிலும், நமக்கு காலைஉணவு என்றாலே உடனடியாக இட்லியும், தோசையும் நினைவுக்கு வரும். தற்போது இந்த பதிவில் சுவையான பாசிப்பருப்பு இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பாசிப்பருப்பு – 1 கப்
- பச்சரிசி – கால் கப்
- சர்க்கரை – கால் கப்
- தேங்காய் துருவல் – கால் கப்
- ஏலக்காய்பொடி – அரை டேபிள் ஸ்பூன்
- ஆப்பச்சசோடா – 1 சிட்டிகை
- ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் பருப்பு மற்றும் அரிசி இரண்டையும் தனித்தனியாக ஊற வைத்து ஒரு மணி நேரம் கழித்து கரகரப்பாக அரைக்க வேண்டும். பிநாதனுடன் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய்பொடி, பாதி நெய், ஆப்பசோடா சேர்த்து நனறாக கலந்து இட்லி மாவு பதத்தில் நீரோ, நீரோ அல்லது பாலோ ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் நெய் தடவிய இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வேக விட வேண்டும். பின் இட்லியை கத்தியால் குத்தி பார்க்க வேண்டும். இட்லி வெந்திருந்தால், கத்தியில் இட்லி ஒட்டாது. அதன் பின் அவிந்ததும் இறக்கி துண்டு போட்டு சூடாக சாப்பிட வேண்டும்.