சுவையான சிக்கன் ஆம்லெட் செய்வது எப்படி?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆம்லெட் விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த ஆம்லெட்டிலேயே பல வகையான விதவிதமான ஆம்லெட்டுகள் உள்ளது. தற்போது இந்த பதிவில், சுவையான சிக்கன் ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- சிக்கன் – கால் கிலோ
- பச்சை மிளகாய் – 7
- இஞ்சி – 2 துண்டுகள்
- முட்டை – 1
- உப்பு – தேவையான அளவு
- வெங்காயம் – 1
செய்முறை
முதலில் சிக்கனை சிறியதாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் போன்றவற்றை அரைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு சிக்கன் துடுகளுடன் அரைத்த மசாலா, உப்பு போட்டு கிளறி வைக்க வேண்டும்.
பின்பு குக்கரில் ஒரு டம்ளர் நீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை வைத்து குக்கரை மூடி வைக்க வேண்டும். பின் ஒரு விசில் வந்ததும் இறக்க வேண்டும். பின் முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு நுரைக்க கலக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு போட்டு கலக்க வேண்டும்.
அதன்பின் குக்கரில் வைத்திருந்த எடுத்து முட்டையில் போட்டு தோசைக்கல்லில் ஆம்லெட் ஆக ஊற்ற வேண்டும். இப்பொது சுவையான சிக்கன் ஆம்லெட் தயார்.