சுவையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி?
நமது வீட்டில் உள்ள குழந்தைகள் காலையிலும், மாலையிலும் தேநீரோடு சேர்த்து பிஸ்கட், வடை போன்ற ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுண்டு. அதற்கு நாம் கடையில் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுப்பதை விட, நாமே செய்து கொடுப்பது நல்லது.
தற்போது இந்த பதிவில், சுவையான பட்டர் பிஸ்கட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- வெண்ணெய் – 100 கிராம்
- மைதா மாவு – 140 கிராம்
- போடி செய்த சீனி – 40 கிராம்
- முட்டையின் மஞ்சள் கரு – 3
- வெனிலா சுகர் பவுடர் – அரை தேக்கரண்டி
- முந்திரி – 5
செய்முறை
முதலில் வெண்ணெயை உருக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் போடி செய்த சீனியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெண்ணிலா சுகர் பவுடர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
பின் பிசைந்த மைதா மாவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் மெல்லியதாக ட்ரேயில் எண்ணெய் தடவி, அதில் பிசைந்த மாவை சிறிய வட்ட வடிவ பிஸ்கட்டுகளாக தட்டி இடைவெளி விட்டு வைக்க வேண்டும். பின் நடுவில் முந்திரியை வைத்து அலங்கரிக்க வேண்டும்.
பின்பு, 180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 10 நிமிடங்கள் வரை வைத்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான பட்டர் பிஸ்கட் தயார்.