சுவையான இனிப்பு ப்ரெட் ரோஸ்ட் செய்வது எப்படி?

நாம் தினமும் காலையிலும், மாலையிலும் தண்ணீர் அருந்துவது வழக்கம். தேநீர் அருந்தும் போது, அதனுடன் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிடுவதுண்டு. அவற்றை நம்மில் சிலர் கடையில் வாங்கி சாப்பிடுவதுண்டு. ஆனால், கடையில் வாங்குவதைவிட, நாமே செய்து சாப்பிடுவது தான் சிறந்தது.
தற்போது இந்த பதிவில் சுவையான இனிப்பு ப்ரெட் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- ப்ரெட் துண்டுகள் – 4
- முட்டை – 2
- பால் – அரை கப்
- சீனி – 2 மேசைக்கரண்டி
- பட்டர் – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பால், சீனியை சேர்த்து நன்கு நுரை போங்க அடித்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிதளவு பட்டறை போட்டு உருக விட வேண்டும். பின் அடித்து வைத்திருக்கும் முட்டை கலவையில் பிரெட்டை தோய்த்து எடுக்க வேண்டும்.
பின் தோய்த்த ப்ரெட் துண்டை தோசைக்கல்லில் போட்டு வேக விட வேண்டும். ப்ரெட்டின் ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கமும் திருப்பி போட்டு மொருமொருப்பாக வந்தது எடுக்க வேண்டும். இப்போது சுவையான இனிப்பு ப்ரெட் ரோஸ்ட் தயார்.