ருசியான இறால் சாதம் செய்வது எப்படி?
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கடல் உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில் என்றாலும் ஒரு கடல் வகை உணவு தான். இந்த இராலினை நாம் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு.
தற்போது இந்த பதிவில், சுவையான இறால் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பாசுமதி அரிசி – 500 கிராம்
- இறால் – 200 கிராம்
- பெரிய வெங்காயம் – 4
- ப்ளம்ஸ் – 50 கிராம்
- பச்சை மிளகாய் – 7
- நெய் – 50 கிராம்
- மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் அரிசியை நன்றாக கழுவி நீரை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயத்தை நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ரைஸ் குக்கரில் நெய்யை விட்டு, சூடானதும் வெங்காயம், மிளகாயை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கி வரும் போது சுத்தம் செய்த இறாலை போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அரிசி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அரிசியின் அளவிற்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி மூட வேண்டும். சத்தம் நன்கு வெந்ததும், இறக்கி விட வேண்டும்.