சுவையான மில்க் பேடா செய்வது எப்படி?
நம்மில் அனைவரும் விழாக்களை கொண்டாடும் போது, நமது வீடுகளில் பலகாரங்களை செய்து சாப்பிடுவதுண்டு. பலகாரங்கள் இருந்தால் தான் அந்த நாள் கொண்டாட்டமான நாள் போன்று அமையும். அந்த வகையில், நாம் தற்போது இந்த பதிவில் நவராத்திரி ஸ்பெஷலாக சுவையான மில்க் பேடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- கெட்டியான பால் – 200 கிராம்
- பால் பவுடர் – 3/4 கப்
- நெய் – 1/2 டேபிள் ஸ்பூன்
- ஏலக்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
- ஜாதிக்காய் பொடி – சிறிதளவு
- குங்குமப்பூ – 3-4
செய்முறை
முதலில் அடுப்பில் கடாயை மிதமான சூட்டில் வைத்து, நெய்யை சேர்க்க வேண்டும். பின் அதனுடன் பால் பவுடர் மற்றும் கெட்டியான பாலினை சேர்க்க வேண்டும். அதனை கடாயின் அடியில் பிடிக்காதவாறு நன்றாக கிளற வேண்டும்.
பின் அதனுடன் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் பொடியை சேர்த்து, பாத்திரத்தின் பக்கவாட்டில் ஒட்டாதவாறு கிளறி விட வேண்டும். அதன் பின் அதனை இறங்கி 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஆற வைக்க வேண்டும். பின் குங்குமப்பூவை சேர்த்து, உள்ளங்கைகளில் சின்ன சின்ன பந்து வடிவத்தில் உருட்டி, பந்துகளை பேடா வடிவத்தில் தட்ட வேண்டும். இப்போது சுவையான மில்க் பேடா தயார்.