சுவையான லெமன் சிக்கன் செய்வது எப்படி?
நாம் நமது அன்றாட வாழ்வில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும், அனைவரும் சிக்கனை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான லெமன் சிக்கன் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- சிக்கன் – 300 கிராம்
- பெரிய வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 3
- மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
- மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
- எலுமிச்சை – 1
- லவங்கம் – 3
- பட்டை – சிறிய துண்டு
- எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- கொத்தமல்லி -தேவையான அளவு
- தயிர் – 3 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் சிக்கன் துண்டுகளை எலும்பு இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் 3 தேக்கரண்டி தயிர் சேர்த்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, பிரிஞ்சி இலை, லவங்கம், பட்டை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின் நறுக்கிய வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளற வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், ஊறவைத்த சிக்கன் கலவை சேர்க்க வேண்டும். சிறு தீயில், சிக்கனை நன்றாக கிளறி வேக விட வேண்டும். சிக்கனை பாதி வெந்தவுடன் எலுமிச்சை சாறை பிழிந்து வேக விட வேண்டும். பிறகு இறுதியாக மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும். இப்பொது சுவையான லெமன் சிக்கன் தயார்.