சுவையான பொரி உருண்டை செய்வது எப்படி?
நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அதிலும், விழாக்காலங்களில் நாம் பல வகையான பலகாரங்களை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான பொரி உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பொரி – 2 கப்
- ஏலக்காய்தூள் – 2 சிட்டிகை
- பொடித்த வெல்லம் – அரை கப்
- தண்ணீர் – கால் காபி
- நெய் – சிறிதளவு
செய்முறை
முதலில் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் வெல்லக்கரைசலை ஊற்றி மிதமான சூட்டில், வைத்து கொதிக்க விட வேண்டும். பின் பாகு நன்றாக கொதிக்கும் போது, ஏலக்காய் தூளை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
அதன்பின், வெல்ல பாகு உருட்டு பதம் வரும் வரை சூடாக்க வேண்டும். பின் பொரியை பாகில் இட்டு, ஆறிய பின் கையில் நெய் தடவி, சிறிய உருண்டையாக பிடிக்க வேண்டும். இப்பொது சுவையான பொரி உருண்டை தயார்.