சுவையான முட்டை வறுவல் செய்வது எப்படி?
நாம் நமது அன்றாட வாழ்வில் பல் வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அதிலும், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவதுண்டு.
தற்போது இந்த பதிவில் சுவையான முட்டை வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- முட்டை -3
- உப்பு – தேவைக்கேற்ப
- மிளகாய்தூள் – கால் டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – தேவைக்கேற்ப
- வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 3
- கடுகு – அரை ஸ்பூன்
செய்முறை
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடேறியதும் கடுகை போட்டு தாளிக்க வேண்டும். பின்பு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியவுடன், முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும். பின் முட்டை நன்கு வெந்தவுடன் இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான முட்டை வறுவல் தயார்.