சுவையான சில்லி இட்லி செய்வது எப்படி?
நாம் தினமும் காலையில், ஏதாவது ஒரு டிபன் செய்வது வழக்கம். அந்த வகையில் நாம் ஒரே உணவுகளையே செய்து கொடுக்காமல், விதவிதமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.
தற்போது இந்த பதிவில் சுவையான சில்லி இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- இட்லி – 10
- தக்காளி – 3
- கறிவேப்பிலை – 2 கொத்து
- கொத்தமல்லி – 2 கொத்து
- சில்லி சிக்கன் மசாலா – 1 மேசைக்கரண்டி
- உப்பு – ஒரு தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 2
- எண்ணெய் – சிறிதளவு
செய்முறை
முதலில் இட்லியை வேக வைத்து எடுத்து, தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் இட்லியை ஆற வைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணேய் விட்டு காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு 20 நொடிகள் வதக்க வேண்டும்.
அதன்பின், அதில் துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை போட்டு வதக்க வேண்டும். பின் தக்காளியை நன்கு மசித்து விட்டு, மசாலா தூள் சேர்த்து வேக விட வேண்டும். பின் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி கிளற வேண்டும்.
பின் தூண்களாக்கி வைத்துள்ள இட்லியை போட்டு கிளறி விட வேண்டும். இட்லியில் மசாலா நன்கு சேரும்படி பிரட்டி விட வேண்டும். சிறிது நேரம் வேக விட்டு, இட்லியில் நன்கு மசாலா பிடித்தவுடன் இறக்க வேண்டும். இப்போது சுவையான சில்லி இட்லி தயார்.