நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை விரும்பி உண்ணுகின்றோம். அதில் சிக்கனை பொறுத்தவரையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி உண்பதுண்டு.
தற்போது இந்த பதிவில் சுவையான சிக்கன் சாப்ஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் அரை கிலோ சிக்கனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் இவற்றை அரைத்து கொள்ள வேண்டும். அதன்பின் சிக்கன் துண்டுகளுடன் அரைத்த மசாலா, தேவையான உப்பு போட்டு பிசறி வைக்க வேண்டும்.
பின் பிரஷர் குக்கரில் 2 டம்ளர் நீர் ஊற்றி, அதன் மீது பிசறி வைத்துள்ள சிக்கன் உள்ள பாத்திரத்தை குக்கரில் வைத்து வெயிட் வைத்து மூடி ஒரு விசில் வந்தவுடன் இறக்க வேண்டும். பின்பு குக்கரை திறந்து சிக்கன் துண்டுகள் உள்ள பாத்திரத்தை வெளியே எடுக்க வேண்டும்.
அதன் பிற இரண்டு முட்டைகளை தேவையான அளவு உப்பு கலந்து நன்கு நுரைக்க அடித்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக அடித்து வைத்துள்ள முட்டையில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான சிக்கன் சாப்ஸ் தயார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…