சுவையான வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பக்கோடாவை விரும்பி சாப்பிடுவதுண்டு. நாம் அதிகமாக பக்கோடாவை மாலையில் அல்லது காலையில் தேநீருடன் சாப்பிடுவதை தான் விரும்புவதுண்டு.
தற்போது இந்த பதிவில், சுவையான வெண்டைக்காய் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- வெண்டைக்காய் – 200 கிராம்
- வெங்காயம் – ஒன்று
- கடலைமாவு – ஒருகப்
- கார்ன்ப்ளர் – அரை கப்
- முந்திரிப்பருப்பு – 10
- மிளகாய்தூள் – ஒரு தேக்கரண்டி
- தனியாதூள் – ஒரு தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் முந்திரியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் வெண்டைக்காயை ஒரு அங்குல நீளத்திற்கு விருப்பம் போல வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில், வெண்டைக்காயுடன் நறுக்கிய வெங்காயம், முந்திரிப்பருப்பு, உப்பு, மிளகாய்தூள், தனியாத்தூள் சேர்த்து முதலில் நன்கு பிசைந்துக் கொள்ள வேண்டும். பிறகு கடலை மாவு மற்றும் சோளமாவு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசறி கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை அரைமணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்திருக்கும் வெண்டைக்காயை சிறிது சிறிதாக போட்டு நன்கு சிவக்க பொறித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான வெண்டைக்காய் பக்கோடா தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!
February 24, 2025
இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது! நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள்!
February 24, 2025
தமிழகத்தில் எங்கெல்லாம் எப்போது மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்…
February 24, 2025
NZvsBAN : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச முடிவு!
February 24, 2025
ஈஷா யோகாவின் சிவராத்திரி விழாவுக்கு தடையில்லை! உயர்நீதிமன்றம் உத்தரவு!
February 24, 2025