சுவையான அகத்தி கீரை சுப் செய்வது எப்படி?
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகைகையான கீரைகளை பயன்படுத்துகிறோம். கீரைகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பல நோய்களில் இருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது. தற்போது இந்த பதிவில் சுவையான அகத்தி கீரை சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- அகத்தி கீரை – 1 கட்டு
- துவரம் பருப்பு – கால் காபி
- பச்சரிசி – கால் கப்
- பூண்டு பல் – 10
- சின்ன வெங்காயம் – 15
- தக்காளி – 2
- கிராம்பு – 3
- பட்டை -1
- சீரகம் – அரை ஸ்பூன்
- மிளகுத்தூள் அரை ஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
அகத்தி கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கொள்ள வேண்டும். பின் தக்காளியை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அகத்திக்கீரை, துவரம் பருப்பு, பச்சரிசி, பூண்டு பல், சின்ன வெங்காயம், தக்காளி, கிராம்பு, பட்டை, சீரகம் மிளகுதூள் எல்லாவற்றையும் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை குக்கரில் வைக்க வேண்டும்.
இவையெல்லாம் ஆறியவுடன் ஒரு கரண்டியால் நன்றாக மசிக்க வேண்டும். பின் மேலும் 1 கப் தண்ணீர் விட்டு வடிகட்ட வேண்டும். பின் வடிகட்டிய தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்க வேண்டும். இப்பொது சுவையான அகத்தி கீரை சூப் தயார்.