அசத்தலான முட்டை தோசை செய்வது எப்படி?

Published by
லீனா

நாம் நமது அன்றாட வாழ்வில் பல  வகையான உணவுகளில் உண்கின்றோம். அதிலும், காலையில், இட்லி, தோசை போன்ற உண்பதுண்டு. அதிலும், இந்த உணவுகளை விதவிதமாக செய்து கொடுக்கும் போது, குழந்தைகள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.

தற்போது இந்த பதிவில் சுவையான முட்டை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • தோசைமாவு – ஒருகப்
  • பெரிய வெங்காயம் – ஒன்று
  • தக்காளி – ஒன்று
  • முட்டை – ஒன்று
  • பச்சை மிளகாய் – ஒன்று
  • மிளகுத்தூள் -கால் தேக்கரண்டி
  • சீராக தூள் – கால் தேக்கரண்டி
  • எண்ணெய் – தேவையான அளவு
  • மல்லி இலை – சிறிதளவு

செய்முறை

முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளாகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயத்தை சிறிது எண்ணெய் ஊற்றி கடாயில் லேசாக வதக்க வேண்டும். அதன்பின் முட்டையில் மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு போட்டு அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் சூடானதும் மாவை கரண்டியில் எடுத்து கொண்டு சிறிது கனமான தோசையாக ஊற்றி அதன் மேல் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட வேண்டும். பின் அதன் மேல் அடித்து வைத்த முட்டையை ஊற்றி தக்காளி, பச்சைமிளகாய், மல்லித்தழை தூவி திருப்பிப்போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்க வேண்டும்.

Published by
லீனா

Recent Posts

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னை: கடந்த நான்கு நாட்களாக ஏந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.…

12 minutes ago

“அஜித் உடம்பில் ஒரு சின்ன கீறல் கூட இல்லை” – ரேஸிங் அணி வீரர் ஃபேபியன்.!

துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிவேகமாக வந்த கார்,…

26 minutes ago

பாலியல் வழக்கில் சிக்கிய வட்டச் செயலாளர்! அதிரடி நீக்கம் செய்த அதிமுக!

சென்னை : கடந்த ஆண்டு  செப்டம்பர் மாதம் சென்னை அருகில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிறுமியின் பெற்றோர் புகார் அளிக்க சென்றபோது…

1 hour ago

பொங்கல் தொகுப்பு – நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம்…

1 hour ago

“இந்திய வீரர்கள் இங்கு வந்து விளையாடுங்க” அழைப்பு கொடுத்த ஏபி டி வில்லியர்ஸ்!

தென்னாப்பிரிக்கா : SA20 கிரிக்கெட் போட்டி என்பது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகும். இந்த போட்டியில் 6…

2 hours ago

Live : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்…நேபாள் நிலநடுக்கம் வரை!

சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ்…

2 hours ago