அசத்தலான முட்டை தோசை செய்வது எப்படி?
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளில் உண்கின்றோம். அதிலும், காலையில், இட்லி, தோசை போன்ற உண்பதுண்டு. அதிலும், இந்த உணவுகளை விதவிதமாக செய்து கொடுக்கும் போது, குழந்தைகள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
தற்போது இந்த பதிவில் சுவையான முட்டை தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- தோசைமாவு – ஒருகப்
- பெரிய வெங்காயம் – ஒன்று
- தக்காளி – ஒன்று
- முட்டை – ஒன்று
- பச்சை மிளகாய் – ஒன்று
- மிளகுத்தூள் -கால் தேக்கரண்டி
- சீராக தூள் – கால் தேக்கரண்டி
- எண்ணெய் – தேவையான அளவு
- மல்லி இலை – சிறிதளவு
செய்முறை
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளாகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயத்தை சிறிது எண்ணெய் ஊற்றி கடாயில் லேசாக வதக்க வேண்டும். அதன்பின் முட்டையில் மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு போட்டு அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் சூடானதும் மாவை கரண்டியில் எடுத்து கொண்டு சிறிது கனமான தோசையாக ஊற்றி அதன் மேல் வதக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட வேண்டும். பின் அதன் மேல் அடித்து வைத்த முட்டையை ஊற்றி தக்காளி, பச்சைமிளகாய், மல்லித்தழை தூவி திருப்பிப்போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்க வேண்டும்.