அசத்தலான வாழைப்பூ வடை செய்வது எப்படி?
நாம் நமது அன்றாட வாழ்வில் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் அருந்துவது வழக்கம். தேநீருடன் சாப்பிடுவதற்கு நாம் கடைகளில் உணவுகளை வாங்குகிறோம். அவ்வாறு வாங்குவதை விட நாமே சத்துள்ள உணவுகளை செய்து சாப்பிடுவது சிறந்தது.
தற்போது இந்த பதிவில் குழந்தைகளுக்கு பிடித்தமான வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- கடலை பருப்பு – 1 கப்
- வாழைப்பூ – அரை கப்
- வெங்காயம் – ஒன்று
- காய்ந்த மிளகாய் – ஒன்று
- உப்பு – ஒரு தேக்கரண்டி
- பெருங்காயம் – சிட்டிகை
- எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடலை பருப்பினை மிளகாயுடன் சேர்த்து ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து ஊற வைத்ததை வடித்து எடுத்து, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வெங்காயத்தினை பொடியாக நறுக்கி அரைத்த மாவுடன் போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். அதன் பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்து வைத்துள்ள மாவை சிறிய, சிறிய வடைகளாக தட்டி எண்ணெயில் நன்றாக மொறுமொறுப்பாக பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான வாழைப்பூ வடை தயார்.