அசத்தலான அரிசிமாவு ரொட்டி செய்வது எப்படி?
நாம் தினமும் காலையில் டிபன் செய்து சாப்பிடுவதுண்டு. அதிகமாக இட்லி மற்றும் தோசையை தான் செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான அரிசிமாவு ரொட்டி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பச்சரிசி மாவு – 3கப்
- தேங்காய் -அரை மூடி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் சட்டியை அடுப்பில் வைத்து மாவை போட்டு மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். பின் தேங்காயை துருவி எடுத்து, மாவுடன் சேர்த்து, சிறிது உப்பும் சேர்த்து, அந்த கலவையில் தண்ணீர் தெளித்து, மாவை சிறிது இளக்கமாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்பு மாவை சப்பாத்தி உருண்டையை விட கொஞ்சம் பெரிதாக எடுத்து துணியை நனைத்து அதில் வைத்து தட்ட வேண்டும். பின் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து ரொட்டியை போட்டு எண்ணெய் விட்டு மிதமான சூட்டில், இருபக்கமும் திருப்பி போட்டு சுட வேண்டும். இப்பொது சுவையான அரிசிமாவு ரொட்டி தயார்.