சுவையான ஓட்ஸ் ஆடை செய்வது எப்படி?
நாம் தினமும் காலையிலும், மாலையிலும் தேநீர் குடிக்கும் போது, தேநீருடன் ஏதாவது சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால், அப்படிப்பட்ட உணவுகளை கடைகளில் வாங்குவதை தவிர்த்து, நாமே செய்து சாப்பிடுவது நல்லது.
தற்போது இந்த பதிவில், சுவையான ஓட்ஸ் ஆடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- ஓட்ஸ் – ஒன்றரை கப்
- ரவா – முக்கால் கப்
- பச்சரிசி மாவு – அரை கப்
- பெரிய வெங்காயம் – 2
- முட்டைகோஸ் – கால் கப்
- மஞ்சள் தூள் – சிறிது
- மிளகாய் தூள் – அரை மேசைக்கரண்டி
- சோம்பு தூள் – அரை மேசைக்கரண்டி
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- உப்பு – தேவையான அளவு
- தயிர் – 2 மேசைக்கரண்டி
- எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
வாணலியில் ஓட்ஸ் மற்றும் ரவா சேர்த்து லேசாக வறுத்து மிக்சியில் பொடிக்க வேண்டும். பின் வெங்காயம், முட்டைகோஸ் நறுக்கி வைக்க வேண்டும். பின் பொடித்த ஓட்ஸ் கலவையில் அரிசி மாவு, தயிர், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும்.
அதன்பின் கரைத்த மாவில் வெங்காயம், முட்டைகோஸ், மஞ்சள் தூள், சோம்பு தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு கலந்து வைத்துள்ள மாவை அடையாக வார்த்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான ஓட்ஸ் தயார்.