சுவையான கடலைப்பருப்பு கிரேவி எப்படி?
நாம் நமது னறாட வாழ்வில் பல வகையான உணவுகளை விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான கடலைப்பருப்பு கிரேவி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- கடலைப்பருப்பு – 100 கிராம்
- பெரிய வெங்காயம் – ஒன்று
- பூண்டு – 6 பல்
- தக்காளி – ஒன்று
- உப்பு – தேவைக்கேற்ப
அரைக்க
- தேங்காய் – அரை கப்
- சோம்பு – ஒரு தேக்கரண்டி
- பட்டை – ஒரு துண்டு
- கிராம்பு – 2
- இஞ்சி – சிறிய துண்டு
- பூண்டு – 2 பல்
- மிளகாய்தூள் – ஒரு தேக்கரண்டி
- மல்லித்தூள் – சிறிது
தாளிக்க
- பட்டை – 2 துண்டு
- கிராம்பு – 4
- சோம்பு – கால் தேக்கரண்டி
- எண்ணெய் – தேவைக்கு
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் வைத்துக் கொள்ள வேண்டும். பின் குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றை தாளிக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, தக்காளி, உப்பு, கறிவேப்பிலை சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்க வேண்டும்.
பின் அதில் அரைத்த தேங்காய் விழுதுடன் கடலைப்பருப்பை நன்கு அலசிவிட்டு சேர்க்க வேண்டும். பின் 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து 3 விசில் வந்தவுடன் இறக்க வேண்டும். இப்போது சுவையான கடலைப்பருப்பு கிரேவி தயார்.