சுவையான பீட்ரூட் கொழுக்கட்டை எப்படி?
நாம் நமது இல்லங்களில், திருவிழா நேரங்களில் வித்தியாசமான உணவுகள் மற்றும் பலகாரங்களை செய்து சாப்பிடுவதுண்டு. திருவிழா நேரங்களில் நமது இல்லங்களில் பலகாரங்கள் இல்லையென்றால், அது திருவிழா போன்றே இராது. தற்போது இந்த பதிவில் அசத்தலான பீட்ரூட் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பீட்ரூட் துருவல்
- அரிசி மாவு – தலா ஒரு கப்
- தேங்காய் துருவல் – கால் கப்
- பொடித்த வெல்லம் – முக்கால் கப்
- ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்
- நெய் – 4 டீஸ்பூன்
- முந்திரிப்பருப்பு – 10
செய்முறை
முதலில் அரிசி மாவை வெறும் கடாயில் வறுக்க வேண்டும். பின் கடாயில், வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி வெல்லத்தை கரையவிட்டு வடிகட்ட வேண்டும். பின் அரிசி மாவுடன் பீட்ரூட் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய்தூள், முந்திரிப்பருப்பு, நெய் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
அதன்பின், வடிகட்டிய வெள்ளக் கரைசலை அதில் விட்டு, கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். கலவையில் சிறிது சிறிதாக எடுத்து ஒருத்தி, லேசாக தட்டிகே கொள்ள வேண்டும். பின் ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். பின் மேலே முந்திரிப்பருப்பை வைத்து அலங்கரிக்க வேண்டும்.