அசத்தலான கேரட் ரைஸ் செய்வது எப்படி தெரியுமா?
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு. அணைத்து உணவுகளும் நமக்கு பிடித்த வகையில் இருந்தாலும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும் வகையில் இருக்க வேண்டும்.
தற்போது இந்த பதிவில் சுவையான கேரட் ரைஸ் செய்வது என்று பார்ப்போம்.
தேவையானவை
- சாதம் – 2 கப்
- கேரட் – 2
- பூண்டு – 4 பல்
- பச்சைமிளகாய் – 3
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் கேரட்டை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பின், பச்சைமிளகாய், பூண்டு போட்டு கொஞ்சம் உப்பு சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
பின், அதனுள் கேரட்டை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின் அதனுள் சாதத்தை சேர்த்து வதக்க வேண்டும். இப்போது சுவையான கேரட் ரைஸ் தயார்.