சத்தான பயறு லட்டு செய்வது எப்படி தெரியுமா?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நாம் அனுதினமும் நமக்கு பிடித்தமான உணவுகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. நாம் வாங்கி உண்ணுகின்ற உணவுகள் அனைத்தும் நமது உடலுக்கு ஆரோக்கியமானதாக இருப்பதில்லை. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.
தற்போது இந்த பதிவில் சத்தான பயறு லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- வறுத்த பயறு மாவு – 1 கப்
- நாட்டு சர்க்கரை – 3/4 கப்
- நெய் – 1/4 கப்
- ஏலப்பொடி – 1 டீஸ்பூன்
- முந்திரி, திராட்சை, பேரீச்சம்பழம் – சிறிதளவு
செய்முறை
முதலில் முழு பயறை வாணலியில் நல்ல வாசனை வரும் வரை மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். பின் அதனை ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும்.
பின் நாட்டு சர்க்கரையை நன்கு பொடித்து இதனையுடன் ஏலப்பொடி, நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி, பேரீச்சம் பலம் சேர்த்து நன்கு சூடாக்கிய நெய் ஊற்றி உருண்டைகள் பிடித்து ஆறியபின் ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும். இப்பொது சுவையான பயறு லட்டு தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)