சுவையான ரவா சீடை செய்வது எப்படி தெரியுமா?

Published by
லீனா

நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான உணவுகளை விரும்பி உண்கிறோம்.அதிலும் நம்மில் அதிகமானோர் காலையிலும், மாலையிலும் டீ குடிக்கும் போது, ஏதாவது ஒரு உணவினை சேர்த்து சாப்பிடுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது இந்த பதிவில், சுவையான ரவா சீடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • ரவை – கால் கப்
  • பச்சரிசி – 2 கப்
  • ஜவ்வரிசி – அரை கப்
  • பச்சை மிளகாய் – 4
  • புளித்த தயிர் – 1 கப்
  • பெருங்காயம் – 1 சிட்டிகை
  • எள் – 2
  • உப்பு – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

அரிசியை ஊற வைத்து, நிழலில் உலர்த்தி சற்று ஈரத்துடன் இருக்கும் போதே, மெஷினில் கொடுத்து அரைக்க வேண்டும். பின் இந்த மாவை வெறும் கடாயில் குறைந்த தீயில் வறுக்க வேண்டும். மாவை இறக்கி ஆற விட்டு நன்கு சலிக்க வேண்டும்.

அதன்பின் ஜவ்வரிசி, ரவையுடன் தயிர் சேர்த்து, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 5 முதல் 6 மணி நேரம் ஊற வைத்து அரைக்க வேண்டும். பின்பு சலித்த மாவுடன் அரைத்த மாவை சேர்க்க வேண்டும். பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பெருங்காயம், பச்சை மிளகாய் விழுது, உப்பு, எள் ஆகியவற்றை அதோடு சேர்த்து பிசைந்து உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான ரவா சீடை தயார்.

Published by
லீனா

Recent Posts

இன்று அரியணை ஏறும் ட்ரம்ப்… மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த டிக்டாக்!

வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…

46 minutes ago

பரந்தூரில் வேண்டாமா? அப்போ மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை!

சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக  விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…

1 hour ago

“நடிகரா இருப்பதை வெறுக்கிறேன்”…கெளதம் மேனன் வேதனை பேச்சு!

சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…

2 hours ago

ஓஎம்ஆர் விடைத்தாளில் மாற்றங்கள் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி!

சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது  www.tnpsc.gov.in…

2 hours ago

“புதிய யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுக” – மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…

3 hours ago

லக்னோ அணி புது கேப்டன் ரிஷப் பண்ட்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த உரிமையாளர்!

டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…

3 hours ago