சுவையான மட்டன் கறி வறுவல் செய்வது எப்படி தெரியுமா?
நமது சமையலில் மட்டன் கறி ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. மட்டன் கறியை பொறுத்தவரையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு என்றும் கூட கூறலாம். இந்த மட்டன் கறி பல நோய்களுக்கு மருந்தாக கூட பயன்படுகிறது.
தற்போது இந்த பதிவில் சுவையான மட்டன் கறி வறுவல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- வெங்காயம் – 2
- தக்காளி – 2
- மட்டன் கறி – அரை கிலோ
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – தேவைக்கேற்ப
- தேங்காய் துருவல் – கால் கப்
- இஞ்சி – 1 துண்டு
- சீரகம் – 1 டீஸ்பூன்
- மிளகு – 1 டீஸ்பூன்
- சோம்பு – 1 டீஸ்பூன்
- பூண்டு பல் – 2
- காய்ந்த மிளகாய் – 4
செய்முறை
முதலில் தேங்காய் துருவல், இஞ்சி, சீரகம், மிளகு, சோம்பு, பூண்டு பல், காய்ந்த மிளகாய் போன்றவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை வதக்க வேண்டும். பின் கறி, அரைத்த விழுது, உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வேகா விட்டு இறக்க வேண்டும்.
கறி வறுவல் போல் வேண்டும் என்றால், தண்ணீர் வெற்றி நல்ல சுருள கிளற வேண்டும். கிரேவியாக வேண்டும் எனில், சிறிது தண்ணீர் இருக்கும் போதே இறக்க வேண்டும். இப்பொது சுவையான மட்டன் கறி வறுவல் தயார்.