சுவையான நண்டு ரசம் செய்வது எப்படி தெரியுமா?
நாம் நமது அன்றாட வாழ்வில் மீன், நண்டு, இறால் போன்ற கடல் உணவுகளை வைத்து பல வகையான உணவுகளை செய்கிறோம். இந்த உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுகிறோம்.
தற்போது இந்த பதிவில் சுவையான நண்டு ரசம் வைப்பது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- நண்டு – கால் கிலோ
- மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
- சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – தேவைக்கேற்ப
- தக்காளி – 1
- சின்ன வெங்காயம் – 15
- பூண்டு பல் – 5
- கறிவேப்பிலை – 1 கொத்து
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
- சோம்பு – அரை டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும். பூண்டை நசுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு, சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் நண்டு, மிளகாய் தூள், பூண்டு, மிளகுத்தூள், சீரகத்தூள் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பி 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கி பரிமாற்ற வேண்டும். இப்பொது சுவையான நண்டு ரசம் தயார்.