சுவையான பால்கோவா செய்வது எப்படி தெரியுமா?
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பால்கோவாவை விரும்பி சாப்பிடுவதுண்டு. இவற்றை நாம் வீட்டில் செய்து சாப்பிடுவதை விட, கடைகளில் தான் வாங்கி சாப்பிடுகிறோம். தற்போது இந்த பதிவில், நமது வீட்டிலேயே சுவையான பால்கோவா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- மில்க்மெயிடு – 1 கப்
- பால் பவுடர் – கால் கப்
- கெட்டி தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
- நெய் – – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் மில்க்மெயிடு, பால் பவுடர், கெட்டி தயிர், நெய் ஆகியவற்றை கலந்து, மைக்ரோவேவ் ஓவனில் ஒரு 4-6 நிமிடங்கள் வைக்க வேண்டும். இடையிடையே வெளியில் எடுத்து கிளறி விட்டு திரும்ப வைக்க வேண்டும்.
அதன் பின் ஓவனில் 6 முதல் 7 நிமிடங்கள் வைத்து, எடுத்தால், சுவையான பால்கோவா தயார்.