அசத்தலான மீன் பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
நமது சமையல்களில் மீன் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. மீன்களை நாம் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த மீன் பிரியாணி செய்வது எப்படி பார்ப்போம்.
தேவையானவை
- மீன் – கால் கிலோ
- அரிசி – 2 ஆழாக்கு
- வெங்காயம் – 150 கிராம்
- தக்காளி – 150 கிராம்
- இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
- புதினா – சிறிதளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
- மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்
- தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
- தயிர் – 1 கப்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
மீனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியை பொடியாக நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். மிளகாயை கீறிக்கொள்ள வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் அல்லது குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும். பின் தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை வதக்க வேண்டும். பின் மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
பின் அதனுடன் அரிசியை சேர்த்து, தம் சேர்த்து வேக வைக்க வேண்டும். குக்கரில் ஒரு விசில் வந்ததும் இறக்கி விட வேண்டும். இப்பொது சுவையான மீன் பிரியாணி தயார்.