கோடையில் காலத்தில் உடலில் ஏற்படும் நோய்களை நீக்கி ஆரோக்கியத்தை அள்ளித்தரும் அத்திப்பழ மில்க் ஷேக் எப்படி செய்வது என்பதை பற்றி நீங்கள் அறிவீரா !
கோடை காலத்தில் உடலில் ஏற்படும் வெப்பத்தை தணிக்க நாம் பல ஜூஸ் வகைகளை குடித்து வருகிறோம். அந்த வகையில் அத்திப்பழம் நமது உடலுக்கு பல விதமான சத்துக்களை கொடுக்கும் கனி வகைகளில் ஒன்று. இது நமது உடலில் உள்ள பல விதமான நோய்களுக்கு மிக சிறந்த தீர்வாக விளங்குகிறது. இதனை நாம் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் இதனை அவர்கள் விரும்பி உண்பார்கள்.
நமது உடலுக்கு கோடை காலத்தில் ஆரோக்கியத்தை அளிக்கும் அத்திப்பழ ஷேக் ரெசிபியை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
தேவையான பொருள்கள் :
அத்திப்பழம் -10
குளிர்ந்த பால் -2 கப்
சர்க்கரை (அ) பால் -தேவையான அளவு
வென்னிலா ஐஸ் -1 கியூப்
செய்முறை :
அத்திப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு அதனுடன் பால் மற்றும் சர்க்கரை (அ ) தேன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பின்பு வென்னிலா ஐஸ் சேர்ந்து ஒரு முறை அரைத்து பின்பு பரிமாறவும் இப்போது சுவையான அத்திப்பழ மில்க் ஷேக் ரெடி.