தீபாவளியை ப்ரூட் ஜாம் கேக்குடன் கொண்டாடுங்கள்!

நாம் அனைவரும் பல விழாக்களை கொண்டாடுகிறோம். விழாக்கள் என்றாலே நமது இல்லங்களில் பலகாரங்கள் இருந்தால் தான் அந்த விழா முழுமையடையும். அந்த வகையில் சுவையான ப்ரூட் ஜாம் கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- மைதா – 4 தேக்கரண்டி
- கோகோ பவுடர் – 1 தேக்கரண்டி
- பொடித்த சீனி – 3 தேக்கரண்டி
- வெஜிடபிள் ஆயில் – 1 தேக்கரண்டி
- பேக்கிங் பவுடர் – அரை தேக்கரண்டி
- பால் – அரை கப்
- ப்ரூட் ஜாம் – 2 தேக்கரண்டி
செய்முறை
முதலில் கேக் செய்வதற்கான தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் மைக்ரோவேவ் பவுலில் மைதா கோக்கோ பவுடர் சீனி பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்க வேண்டும்.
பின் அதற்கு மேலே ஆயில் சேர்த்து கலக்க வேண்டும். கலவையை மைக்ரோவேவில் 1 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். அதன் பின் 1 நிமிடத்தில் எடுத்து மேலே ப்ரூட் ஜாம் வைத்து மேலும், 30 வினாடிகள் வைத்து எடுக்க வேண்டும். தற்போது சுவையான ப்ரூட் ஜாம் கேக் தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025