சுவையான காரமான கார சேவு செய்வது எப்படி?
நம்மில் அதிகமானோர் காலையிலும், மாலையிலும் தேநீர் அருந்தும் போது ஏதாவது உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிலும் நம்மில் அதிகமானோர் சேவு, வறுவல், முறுக்கு போன்ற நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது உண்டு.
இன்று நாம் சுவையான, காரமான கார சேவு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு – அரை கப்
- அரிசி மாவு – அரை கப்
- மிளகாய் தூள் – கால் டேபிள் ஸ்பூன்
- பெருங்காயத் தூள் – 5 சிட்டிகை
- பூண்டு பல் – 5
- சீரகம் – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவைக்கேற்ப
- எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
பூண்டு மற்றும் பெருங்காயத்தூள் இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் பாத்திரத்தில் மிளகாய்த்தூள், உப்பு இவற்றை சிறிது நீரில் கரைக்க வேண்டும். அதன் பின் கடலை மாவு, அரிசி மாவு, சீரகம், பூண்டு விழுது ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
இதனையடுத்து, தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசைய வேண்டும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சேவு செய்யும் அச்சிலோ அல்லது தென் குழல் அச்சிலோ கலவையை போட்டு பிழிய வேண்டும் சேவு பொன் நிறமாக வெந்ததும் எடுக்க வேண்டும்.