Food : அப்பளத்தை வைத்த துவையல் செய்யலாமா..? அது எப்படிங்க..?
அப்பளம் என்றாலே நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த அப்பளத்தை வட்டமாகவோ அல்லது வேறு வடிவிலோ நாம் செய்வதுண்டு. இந்த அப்பளத்தை நாம் செய்யக்கூடிய உணவுடன் செத்து சாப்பிடுவதுண்டு.
இந்த அப்பளத்தை சாம்பார், தயிர் சாதம், ரசம், பொரியல் போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில், அப்பளத்தை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- அப்பளம் – 4
- கறிவேப்பிலை
- சின்ன வெங்காயம் – 2 வெங்காயம்
- காய்ந்த மிளகாய் – 5
- உப்பு – தேவையான அளவு
- புளி – சிறிதளவு
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அப்பளத்தை பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் காய்ந்த மிளகாய் , சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, புளி, உப்பு ஆகியவற்றை போட்டு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு மிக்சியில், வதக்கி வைத்துள்ளவை மற்றும் அப்பளத்தை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த துவையலை வெறும் சாதத்துடன் சாப்பிட்டாலே மிகவும் சுவையாக இருக்கும். ரசம் மற்றும் சாம்பார் ஆகியவற்றிற்கு கூட்டாக சேர்த்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.
அப்பளத்தை பொரித்து தனியாக சாப்பிடுவதை விட, இப்படி வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.