இன்று நம்மில் பெரும்பாலானோருக்கு மூட்டுவலி மற்றும் முதுகு வலி பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் வயது, உடல் செயல்பாடு, காயங்கள், நோய்கள் போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படுகிறது. இந்த பிரச்னைகளுக்கு நாம் செயற்கையான முறையில் தீர்வு காண்பதை விட, இயற்கையான முறையில் செய்யக்கூடிய உணவுகளை உண்பதன் மூலம் தீர்வு காண்பது மிகவும் நல்லது.
அந்த வகையில், மூட்டுவலி, முதுகு வலி உள்ளவர்களுக்கு பிரண்டை என்பது மிகவும் சிறந்த மருந்தாகும். பிரண்டையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
பிரண்டையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. பிரண்டையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சர்க்கரை நோயை நிர்வகிக்கவும் உதவுகிறது. அதேபோல், பிரண்டையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டுவலி மற்றும் முதுகு வலியைக் குறைக்க உதவுகிறது.
பிரண்டை துவையல் சுவையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இது மூட்டு வலி, வயிற்றுப்பம், வாயு பிடித்தல் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படும் பிரண்டை துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
Veld grape துவையல் செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் முதலில் பிரண்டையை நன்கு கழுவி எடுத்து அதன் தோலை உரித்து சுத்தம் செய்து அதனை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிரண்டை மற்றும் காய்ந்த மிளகாயை பொரித்து எடுத்து கொள்ள வேண்டும்.
அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து வறுத்து பருப்பு பொன்னிறமாக வந்ததும் அதனை எடுத்து மிக்ஸியில் போட்டு பொடியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்சியில், புளி, பூண்டு, இஞ்சி, தேங்காய் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் தனித்தனியாக அரைத்த பின், பிரண்டை வரமிளகாய் பொடி, பருப்பு பொடி மற்றும் உப்பு சேர்த்து கிளறினால், சுவையான பிரண்டை துவையல் தயார்.
இதனை நாம் வெறும் சாதத்துடனும் சாப்பிடலாம். பிரண்டைத் துவையலை மூட்டு வலி, முதுகு வலி பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…